ஹோண்டா யுனிகார்ன் 160 பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா யுனிகார்ன் 160 பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஹோண்டா யுனிகார்ன் 160 பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பி.எஸ்.6 எஞ்சின்கள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே வருகிற ஏப்ரல்.1-ஆம் தேதி முதல் விற்கப்படும். அதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் பி.எஸ்.6 மாடலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஹோண்டா யுனிகார்ன் 160 பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.93,593 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய யுனிகார்ன் 160 பைக்கின் விலையானது தற்போது சந்தையில் விற்கப்படும் யுனிகார்ன் 150 ஏ.பி.எஸ் மாடலை விட ரூ.13,500 வரை அதிகமாகும்.

ttn

மேலும் பழைய யுனிகார்ன் 150சிசி பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுவனம் நிறுத்தி உள்ளது. அதனால் இனி யுனிகார்ன் 160சிசி மாடல் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். அத்துடன் சி.பி. யுனிகான் 160 மாடலின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது. புதிய யுனிகார்ன் 160சிசி பி.எஸ்.6 என்ஜின் கொண்ட மாடலில் மேம்பட்ட வடிவமைப்பு, என்ஜினை ஆஃப் செய்யும் ஸ்விட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஹோண்டா எக்கோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ் பிரேக்கிங் வசதி கொண்டிருக்கும் 2020 யுனிகார்ன் பி.எஸ்.6 மாடலுக்கு ஹோண்டா நிறுவனம் ஆறு வருடங்கள் வாரண்டி வழங்குகிறது. மேலும் பியல் இன்ஜினியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....