Home இந்தியா ஹைதராபாத், உன்னாவ் சம்பவங்களின் கொதிப்பு அடங்குவதற்குள், திரிபுராவில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹைதராபாத், உன்னாவ் சம்பவங்களின் கொதிப்பு அடங்குவதற்குள், திரிபுராவில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹைதராபாத், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவங்களின் கொதிப்பு அடங்குவதற்குள், திரிபுராவில் 17 வயதான சிறுமி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரோடு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி சாந்தினிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகவலைதளம் வாயிலாக அஜோய் ருத்ராபாலின் அறிமுகம் கிடைத்தது. நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு சாந்தினியின் வீட்டுக்கு வந்த அஜோய் அவரிடம் காதலை தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டுள்ளார். காதலன் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் சந்தோஷத்தில் எதனையும் யோசிக்காமல் அவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

சமூக வலைதள நட்பு

சாந்திர்பசாரில் உள்ள அஜோய் வீட்டுக்கு சென்ற பிறகுதான் அவனின் உண்மை முகம் சாந்தினிக்கு தெரியவந்தது. சாந்தினியை வீட்டில் அடைத்து வைத்து அவளை விட வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் தரும்படி அவளது குடும்பத்தினரிடம் அஜோல் கேட்டுள்ளான். இதற்கிடையே அஜோய் மற்றும் அவரது நண்பர்களும் சாந்தினியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மாதங்களாக இந்த கொடூரம் நடந்து வந்துள்ளது.

சமூக வலைதள நட்பு

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சாந்தினியின் குடும்பத்தினர் அஜோய் கூறிய இடத்துக்கு வந்து தங்களால் எவ்வளவுதான் முடிந்தது என்று ரூ.17 ஆயிரத்தை அஜோயிடம் கொடுத்துள்ளனர். ஆனால் முழுபணத்தையும் கொடுத்தால் மட்டுமே சாந்தினியை விடுவேன் என அவர்களை திருப்பி அனுப்பி விட்டான் அஜோய். கேட்ட பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அஜோய் மற்றும் அவரது தாயும் சாந்தினி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்த அஜோய் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் சாந்தினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண் மீது தீ வைப்பு

90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் சாந்தினி அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி சாந்தினி இறந்து விட்டார். இந்த தகவல் பரவியதையடுத்து அஜோய் வீட்டு முன் பெரும் கும்பல் கூடியது. பின் அந்த கும்பல் அஜோய் மற்றும் அவரது தாயாரை அடித்து துவைத்தது. சாந்தினி மீது தீ வைத்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அஜோய்யை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புது காரு வாங்க போறீங்களா?.. முதல்ல கார் நிறுத்த இடம் இருக்கா?.. ஆதாரத்தை காட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி

கார் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வாகன உரிமையாளர் காட்டினால் மட்டுமே புது வாகனத்தை பதிவு செய்ய அனுமதிப்பது குறித்து கர்நாடக அரசு யோசனை செய்து வருகிறது.

மா.செ.’க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

திமுக மா.செக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி...

60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிருடன் மீட்க போராட்டம்

ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் தவறி விழும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த ஆண்டு திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜின் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதால்...

நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை… டி.வி.எஸ்., சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ மகிழ்ச்சி..

கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை சிறப்பாக இருந்ததால், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. நாட்டின்...
Do NOT follow this link or you will be banned from the site!