ஹேப்பி பர்த் டே…கொடைக்கானல்: இது எத்தனாவது பர்த் டே தெரியுமா..!

தமிழகத்தில் இருக்கும் பல மலைவாழிடங்கள் குறித்து சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டிருந்தாலும்,அவற்றை கண்டுபிடித்து ,சாலையமைத்து கோடை கால குடியிருப்புகள் ஆக்கியது ஆங்கிலேயர்களே.

தமிழகத்தில் இருக்கும் பல மலைவாழிடங்கள் குறித்து சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டிருந்தாலும்,அவற்றை கண்டுபிடித்து ,சாலையமைத்து கோடை கால குடியிருப்புகள் ஆக்கியது ஆங்கிலேயர்களே.

kodaikanal

அந்த வகையில் மலைகளின் இளவரசி என்று நாம் இன்று கொண்டாடும் கொடைக்கானலில் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் குடியேறி நேற்றோடு 174 வருடங்கள் ஆகிவிட்டன.அதற்கும் முன்பே பல முயற்சிகள் நடந்திருந்தன. 1821ல் பி.எஸ் வார்டு என்கிற ஒரு பிரிட்டிஷ் ராணுவ லெஃப்டினெண்ட்தான். வெள்ளகாவி என்கிற இடம் வரை போய்விட்டு வந்து,அங்கே நிலவிய குளிர் பற்றி,அவர் தந்த ரிப்போர்ட் பலரை ஆர்வம் கொள்ள வைத்தது.

christian

1834-ல் ஜெ.சி விரோட்டன் என்கிற மதுரை சப் கலெக்டரும்,சி.ஆர் காட்டன் என்கிற மெட்ராஸ் ரெவின்யூ போர்ட் அதிகாரியும் தேவதானப்பட்டியில் இருந்து மலையேறி சென்பகனூர் அருகே ஒரு சிறிய கட்டிடத்தை கட்டினார்கள். அதன்பிறகு 1836-ல் டாக்டர் ராபர்ட் வெயிட் என்கிற தாவர வியலாளர் கொடைக்கானல் மலைத் தாவரங்கள் பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கிறார். 

அவர் அங்கே 15 நாட்கள் தங்கியிருந்து 100 தாவர மாதிரிகளை எடுத்து வந்திருக்கிறார். இதற்குப் பிறகுதான்,கொடைக்கானல் மலையில் காலகாலமாக வாழ்ந்து வந்த பளியர் இன மக்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கத்தில் அமெரிக்க மிஷனரியை சேர்ந்த ஆறு குடும்பத்தினர் இங்கே வந்து சன்னி சைட்,ஷெல்ட்டன் என்று இரண்டு பங்களாக்களைக் கட்டி குடியேறினர்.

அந்த நாளைத்தான் ( மே 26 1845) கொடைக்கானலின் பிறந்த தினமாகக் கொண்டாடி வருகின்றனர். நேற்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையில் கொடைக்கானல் தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து,சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொடைக்கானல் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

அடுத்த ஆண்டுக்குள் லேக் அருகே 65 கோடியில் தங்கும் விடுதி மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்படும் என்று முருகேசன் அறிவித்திருக்கிறார்.

Most Popular

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...
Do NOT follow this link or you will be banned from the site!