Home இந்தியா ஹெல்மெட் போடாமல் சென்று பலியான மகன்...இறுதிச்சடங்கில் தந்தை செய்த காரியம்!

ஹெல்மெட் போடாமல் சென்று பலியான மகன்…இறுதிச்சடங்கில் தந்தை செய்த காரியம்!

சாலை விபத்தை தடுக்க மத்திய மாநில  அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட, வாகன ஓட்டிகளே அதை பின்பற்றி  உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும். 

இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் லட்சத்தைத் தொடுவதாகப் புள்ளி விவரங்கள்  சொல்கிறது. சாலை விபத்தை தடுக்க மத்திய மாநில  அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட, வாகன ஓட்டிகளே அதை பின்பற்றி  உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும். 

ttn

இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஹேந்திரா தீக்ஷித். இவரது மகன் தாமோஹ். செல்லமாக வளர்ந்து  வந்த தாமோஹ் கடந்த மாதம் 20 ஆம் தேதி  தேஜ்கார் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட தாமோஹ் ஹெல்மெட் அணியாமல் சென்றதால்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மகனின் மரணம்  மஹேந்திரா மனதை வெகுவாக பாதித்துள்ளது. 

ttn

தன் மகனைப் போல் யாரும் இறக்கக் கூடாது என்று எண்ணிய தந்தை மஹேந்திரா தீக்ஷித் செய்து வரும் காரியம் பலரையும் நெகிழ்ச்சியுடன் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது  மஹேந்திரா தீக்ஷித் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகத் தலைக்கவசம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

ttn

இதுகுறித்து கூறியுள்ள அவர், என் மகன் இறந்து 10 நாட்கள் தான் ஆகிறது. அவன் விபத்தில் மரணமடைந்தான். அவன்  தலைக்கவசம் அணிந்து சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் . அதனால் என் மகனுக்கு நடந்த இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது. அதனால் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

கோவை கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் 5...

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் : விசாரணையில் தெரிய வந்த உண்மை!

கூடலூர் வடக்கு காவல் நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார். தேனி மாவட்டம் கூடலூர்...

ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி அபார வெற்றி – LPL அப்டேட்

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் போலவே இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப்...

முதல்வர் எடப்பாடியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அரசு

பிரபல ஊடக நிறுவனமான ’இந்தியா டுடே’ வருடம்தோறும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது. தொழில்,...
Do NOT follow this link or you will be banned from the site!