Home இந்தியா ஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு – உள்நாட்டில் ரூ.987 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

ஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு – உள்நாட்டில் ரூ.987 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

ஸ்பைஸ்ஜெட் விமானம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விலைக் குறைப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விலைக் குறைப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. மக்களது இந்த ஆசையை தூண்டும் விதமாக விமான நிறுவனங்களும் அவ்வப்போது மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து சலுகை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் அதிரடியாக விலைக்குறைப்பு செய்துள்ளது.

ttn

அதன்படி ரூ.987 கட்டணத்தில் உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ளலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 15-ஆம் தேதிக்குள் இந்த விலையில் உள்நாட்டில் பயணிப்பதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். மேலும் இந்த சலுகையை பயன்படுத்தி அடுத்தாண்டு பிப்ரவரி 2021 வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உள்நாட்டு விமான டிக்கெட் ரூ.987 எனவும், குறைந்தபட்ச வெளிநாட்டு விமான டிக்கெட் ரூ.3,699 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விமான டிக்கெட் கிடைக்கும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Most Popular

முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்திக்கும் அமைச்சர்கள்.. என்ன காரணம்?!

செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்-ஐ அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்தித்து பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற...

முதல்வர் வேட்பாளர் யார் ? – முடிவான விஷயத்தை ஏற்க வைக்கும் செயற்குழு ?

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான் இன்றைய பிரதான பேச்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கெனவே...

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு ? – தலைமை கழகத்தில் தொண்டர்கள் உற்சாகம்!

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

இன்று நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான...
Do NOT follow this link or you will be banned from the site!