Home தமிழகம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரும் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும். இல்லையெனில், ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற வாய்ப்புள்ளது என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதாகவும், இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கானது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறக்கிறார்!

விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில் அவரின் கன்னியாகுமரி உள்ளிட்ட...

“உயிர் நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்” – மு.க ஸ்டாலின் பதிவு!

இன்று காவலர் வீர வணக்கம் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டுக்காக வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் நீத்த...
Do NOT follow this link or you will be banned from the site!