Home தமிழகம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை
ரத்து செய்தும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின்
வேதனைகளை உணர்ந்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் கிடைத்துள்ள
இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா
நிறுவனம் செய்த மேல்முறையீட்டில், கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலையை
மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவினை
மறுசீராய்வு செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை முடிந்து, அனைத்து தரப்பு
மக்களும் மகிழும் வகையில் கிடைக்கப்பெற்றிருக்கும் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பினை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மகிழ்வுடன் வரவேற்கிறது.

மேலும், ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுக
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை கவனத்தில் கொண்டு, தற்காலிக தீர்வாக இத்தீர்ப்பு
அமையாமல் நிரந்தரத் தீர்வாக அமையும் வரை தனது சட்டப்போராட்டத்தை தமிழக அரசு
தொடர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறேன்.’

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews