ஸ்டெர்லைட் ஆலையை கைவிடுவதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

தூத்துக்குடி சிப்காட்டில் செயல்படவிருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த “காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை” ரத்து செய்ய கோரிய புகாரில் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய அந்தஸ்தை விலக்க இறுதிக்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட்டில் செயல்படவிருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த “காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை” ரத்து செய்ய கோரிய புகாரில் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய அந்தஸ்தை விலக்க இறுதிக்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட்டில் 102.31 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 1994 ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் தனது இரண்டாவது காப்பர் ஆலையை 128.805 ஹெக்டேர் நிலத்தில்  செயல்படுத்த மத்திய வணிக மற்றும் பொருளாதார அமைச்சகத்திடம் 2013 ம் ஆண்டில் “காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து” பெற்றிருந்தது. 

தூத்துக்குடியில் சிப்காட் சட்ட விரோதமாக ஸ்டெர்லைட்டின் இரண்டாவது ஆலைக்கு நிலம் வழங்கியிருப்பதாகவும், அதனை ரத்து செய்ய கோரியும், திருநெல்வேலியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் கடந்த 20/03/2018 ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் வேதாந்தாவின் இரண்டாவது காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த,
“காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்துசெய்ய கோரியும் மத்திய அமைச்சகத்திடம் புகார் மனுக்கள் அனுப்பியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் இதுவரை விசாரணை நடைபெற்று வருவதாகவே கடந்த ஒராண்டாக பதில் மனுக்களில்  தெரிவித்த மத்திய அமைச்சகம், 
இப்போது மனுதாரர் முத்துராமனுக்கு அனுப்பியிருக்கும் பதிலில், வேதாந்தா நிறுவனமே தாமாக முன்வந்து சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தில் இருந்து விலகி கொள்வதாக கூறி விட்டதாகவும்,  அதன்படி இப்போது வேதாந்தாவின் சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை விலக்குவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அந்தஸ்தின்படி, அந்நிறுவனத்தின் இறக்குமதி பொருட்களுக்கு வரி கிடையாது. அதனடிப்படையில் வெளிநாட்டில் இருந்து 105 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும் வரியின்றி பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Most Popular

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....