ஸ்டெம் செல் நன்கொடையாளர்களை தேடும் இந்திய வம்சாவளி பெண்ணின் குடும்பத்தினர்!

இந்திய வம்சவாளி பெண்ணுக்கு பெறப்பட்டுள்ள நோய் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர ஸ்டெம் செல் நன்கொடையாளர்களை அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர்

திருவனந்தபுரம்: இந்திய வம்சவாளி பெண்ணுக்கு பெறப்பட்டுள்ள நோய் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர ஸ்டெம் செல் நன்கொடையாளர்களை அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த லைனா அன்வர் எனும் பெண் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தில் வேலை கிடைத்து பத்திரிகையாளர் ஆகும் தனது கனவு பலித்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு வேறு ஒரு வகையில் அதிர்ச்சி காத்திருந்தது.

Acute Myeloid Leukaemia எனும் தீவிரமான Leukaemia-வால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறிந்தனர். Leukaemia என்பது ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ஒருவகையான புற்றுநோயாகும். இதற்காக கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்த போதிலும், ரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலமே இதனை சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், லைனா அன்வருக்கு ஏற்ற ஸ்டெம்செல்கள் பெறுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினருடையதோ அல்லது எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர்கள் பதிவகத்தில் பதிவு செய்துள்ள 19 மில்லியன் மக்களினுடையதோ அவருக்கு பொருந்தி போகவில்லை.

இதையடுத்து, இந்திய வம்சாவளி பெண்ணான அவருக்கு இந்தியாவில் இருக்கும் நன்கொடையாளர்களின் ஸ்டெம்செல்கள் பொருந்தி போக வாய்ப்பிருக்கிறது என கருதிய அவரது குடும்பத்தினர், தற்போது இந்தியாவில் அவருக்கு ஏற்ற ஸ்டெம்செல்களை தேடி வருகின்றனர்.

லைனா அன்வரின் பெற்றோர்கள் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களுடைய உறவினர்கள் கேரளாவிலும் உள்ளனர். எனவே, இந்த இரு மாநிலங்களிலும் இந்தியாவில் செயல்படும் தாத்ரி எனும் எலும்பு மஜ்ஜை/ஸ்டெம்செல் பதிவகத்தின் துணையோடு அவர்கள் தேடி வருகின்றனர்.

ஸ்டெம்செல் சிகிச்சை:

தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து பலதரப்பட்ட புற்றுநோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம்.

ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி ரத்தம் மூலம் ஸ்டெம் செல்களைப் பெற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது.

Most Popular

கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!

இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக வந்ததது கோழிக்கோடு விமான விபத்து. துபாயிலிருந்து...

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது. 191...

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...