ஸ்டாலின் கனவு பலிக்காது? சர்வாதிகாரி என்று மிரட்டுவதா? – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி!

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நிரப்பி விட்டார்கள். மக்களிடத்திலே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நிரப்பி விட்டார்கள். மக்களிடத்திலே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

stalin and rajendra balaji

திருவண்ணாமலையில் பால் குளிர்விப்பு மையங்களைத் திறந்து வைத்து, பின்னர் பெளர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தோல்வி பயத்தில் பதற்றப்பட்டு மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கட்சியினரிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என கூறுகிறார். இதன் மூலம் மக்களையும் மற்ற கட்சிகளையும் மிரட்டுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவரது கனவு பலிக்காது என்று தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவிடம் அன்பு, கண்டிப்பு, நேர்மை ஆகியவை இருந்தது. அதனால் தான் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார் என்று செய்தியாளர்களிடம் பேசினார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் இருந்தனர்.

Most Popular

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...