Home அரசியல் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மாரிதாஸ்! ட்ரெண்டாகும் புது சர்ச்சை!

ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மாரிதாஸ்! ட்ரெண்டாகும் புது சர்ச்சை!

‘அசுரன்’ படத்தைப் பார்த்து விட்டு ஸ்டாலின் பேசினாலும் பேசினார் இன்று வரையில் அவரை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள். பஞ்சமி நிலங்களை அபகரித்தது தொடர்பான அவரது பேச்சுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்து ‘முரசொலி’ நிலத்தின் மூல பத்திரத்தை தைரியமிருந்தால் காட்டச் சொன்னார்.

ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மாரிதாஸ்! ட்ரெண்டாகும் புது சர்ச்சை!

‘அசுரன்’ படத்தைப் பார்த்து விட்டு ஸ்டாலின் பேசினாலும் பேசினார் இன்று வரையில் அவரை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள். பஞ்சமி நிலங்களை அபகரித்தது தொடர்பான அவரது பேச்சுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்து ‘முரசொலி’ நிலத்தின் மூல பத்திரத்தை தைரியமிருந்தால் காட்டச் சொன்னார்.

stalin

தொடர்ந்து ஸ்டாலினும் எவ்வளவோ முட்டுக்கொடுத்துப் பார்த்தாலும், இன்று வரையில் முரசொலி இடத்திற்கான பத்திரங்களை முன் வைக்கவேயில்லை. இடையில் சுஜித் விவகாரம் எல்லோரையும் திசைதிருப்பி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஸ்டாலின் வலைத்தள வாசிகளிடம் வறுபடத் துவங்கியுள்ளார். 
ஆனால் இம்முறை முரசொலி இடத்திற்கான பஞ்சாயத்தில் கிடையாது. திமுக தொண்டர்கள் ஒவ்வொருமுறையும் மிசா போராட்டத்தில் ஸ்டாலின் கைதானார் என்பதைப் பெருமையாக சொல்லி போஸ்டர் அடித்து வந்ததைக் கிண்டல் செய்து மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் ட்விட்டரில், 
ஸ்டாலின் மிசாவில் தான் கைதானார் என்ற ஆதாரம் இன்னும் வெளியிடவில்லை திமுக.

திமுக கட்சியை விட இந்த ஆதாரத்தை வெளியிடுவதில் (மிசா தியாகி என்று நாடகமாடிய)கருணாநிதி குடும்பத்தினர் தான் அதிகம் பொறுப்புள்ளது. ஆக ஒன்று ஆதாரத்தை வெளியிடுங்கள். இல்லை திமுக தலைவர் பதவி விலகுங்கள். #மிசாவாஉஷாவா என்ற ஹாஸ்டேக்குடன் பதிவு செய்திருக்கிறார்.
இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை அளித்து வருகிறார்கள். ஆதாரம் இருந்தா தானே கொடுக்க முடியும்? வச்சுகிட்டா வஞ்சனை பண்றோம் என்றெல்லாம் பதில் சொல்லி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து #மிசாவா? உஷாவா? என்ற ஹாஸ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மாரிதாஸ்! ட்ரெண்டாகும் புது சர்ச்சை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

விழுப்புரம் மாவட்ட கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை – எஸ்.பி. ஆணை!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கி மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும்...

மறு உத்தரவு வரும் வரை… கீழமை நீதிமன்றங்கள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும்...

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...

அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது...
- Advertisment -
TopTamilNews