Home தமிழகம் ஸ்டாலினுக்கு என்னை பிடிக்காது; சரத்குமார் ஓபன் டாக்!

ஸ்டாலினுக்கு என்னை பிடிக்காது; சரத்குமார் ஓபன் டாக்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னை பிடிக்காது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

ஸ்டாலினுக்கு என்னை பிடிக்காது; சரத்குமார் ஓபன் டாக்!

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னை பிடிக்காது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணித்தலைவி ராதிகா உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்போது பேசிய சரத்குமார், எல்லாம் தெரியும் என்று சொல்வதற்கு நான் என்ன கமல்ஹாசனா? என கேள்வி எழுப்பியதுடன், அதிமுக-வை பற்றி கேலி கிண்டல் செய்து விட்டு இப்போது முதல்வர் வலது புறமும், துணை முதல்வர் இடது புறமும் அமர இவர் இடையில் அமர்ந்து பேசுவார்களாம்..இதுலாமா அரசியல் என பாமக-வை சீண்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், யாரும் என்னை அரசியல் முழுமையாக வர விட மாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால் நான் வந்தால் அவர்கள் அரசியல் வாழ்க்கை போய் விடுமோ என்று பயப்படுகிறார்கள். என்ன அரசியல் நடக்கிறது இந்த நாட்டில் என தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.

அரசியலில் தனக்கு வயது 25 என குறிப்பிட்ட அவர், தான் முதல் முதலில் சேர்ந்த கட்சி திமுக தான். ஆனால் தற்போது உள்ள தலைவருக்கு என்னை பிடிக்காது, அவர் திறமைசாலியாக இருந்து இருந்தால் எப்பவோ முதல்வராக ஆகி இருக்கலாம் என்றார்.

வருமான வரி சோதனை அதிகமாக  உள்ள ஆட்சி என்றால் அது மோடி ஆட்சியில் தான். மோடி போட்ட திட்டங்கள் எப்படி இருக்கு தெரியுமா? Operation successful but patient died  என்பது போல தான் என்றும் சரத்குமார் அப்போது தெரிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், கமல் வந்து அரசியல் பேசினால் அவருடன் இணைந்து பணியாற்றுவது, குறித்து முடிவு எடுக்கப்படும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து போட்டியிட்டால் அரசியல் மாற்றம் வரும் என்று சொல்லும் விஷால் என்ன அரசியல் ஞாநியா? என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்த சரத்குமார், இரண்டு அல்லது மூன்று நாட்களில் தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாகும், 5-ம் தேதியில் நிச்சயமாக வெளியாகும் எனவும் ஆருடம் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு என்னை பிடிக்காது; சரத்குமார் ஓபன் டாக்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews