Home சினிமா ஷெரினை பேசவிட்டு கலாய்த்த விஜய் டிவி பிரபலங்கள்!

ஷெரினை பேசவிட்டு கலாய்த்த விஜய் டிவி பிரபலங்கள்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

bb

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 102 வது நாளை தொட்டுள்ளது. 4 பைனலிஸ்ட்டுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று  சாக்ஷி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன்  ஆகியோர் வந்து இணைந்து கொண்டனர். இன்று பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த விஜய் டிவி தொகுப்பாளர்களும் நடிகர்களுமான தாடி பாலாஜி, பிரியங்கா,மாகாபா ஆனந்த், ரியோ, ரக்ஷன் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.
 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,  ஷெரின் அனைவரது முன்னிலையிலும் பேசுகிறார். நான் இந்த வீட்டில் இருக்க என்ன கத்துக்கிட்டேனா என்று சொல்ல மாகாபா ஆனந்த், ரியோ, ரக்ஷன்  எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

 

herin

இடையில் தாடி பாலாஜி நீ ஹவுஸ்மேட்டா   இல்ல ஹவுஸ்கீப்பிங்கா என்று கேட்டு கிண்டல் செய்கிறார். இறுதியாக ஷெரின் இந்த வீட்ல பேசுறது எனக்கு புரிஞ்சா தானே எங்கள கோபம் வர என்று சொல்ல, உடனே ரியோ..அய்யயோ உன்னோட டாக்டிஸ் சொல்லிட்டியே என்று கலாய்க்கிறார் . 

விஜய் டிவி பிரபலங்களின் வருகை  ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் செம்ம ஜாலியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews