Home தமிழகம் 'வைகோவின் ராசி எப்புடி' : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

‘வைகோவின் ராசி எப்புடி’ : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

வைகோவை ராசி இல்லாதவர் என்று  விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் தற்போது பதிலடி கொடுத்துள்ளனர்.

'வைகோவின் ராசி எப்புடி' : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

மதுரை: வைகோவை ராசி இல்லாதவர் என்று  விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் தற்போது பதிலடி கொடுத்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். அவரின் பேச்சு, அரசியல் நகர்வு ஒவ்வொன்றும் அவர் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று  சொல்லும்  அளவிற்கு இருந்தது. ஆனால் அது வெறும் வெற்று  வார்த்தையால் போனது தான் காலத்தின் கொடுமை.

vaiko

திமுகவுடன் சலசலப்பு, அதிமுகவில் வாக்குவாதம் என வைகோவின் அரசியல் நகர்வு புரியாத புதிராகவே இருந்தது. கடந்த தேர்தலில் மக்கள் நல  கூட்டணி என்ற பெயரில் சிலருடன் கூட்டு சேர்ந்த வைகோவுக்கு தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வைகோ எங்கு சென்றாலும் அங்கு  ராசி இருக்காது. தேர்தலில் ஒரு அணி தோற்க கூடாது என்றால் அந்த கூட்டணியில் வைகோ இருக்க கூடாது என்று மீம்ஸ்கள் மூலமாகவும் சிலர் வெளிப்படையாகவுமே  சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

vaiko

இதையடுத்து கருணாநிதியின் இறப்பிற்கு பிறகு திமுகவுடன் இணைந்த வைகோ, மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். தி.மு.க. கூட்டணிக்கா வைகோ தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.

mdmk

 இந்நிலையில் தாங்கள் வாங்கிய அடிக்கு பதிலடியாக, மதுரையில் மதிமுகவினர் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம்’  என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 

'வைகோவின் ராசி எப்புடி' : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள்...

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில்...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...
TopTamilNews