Home இந்தியா வேலை நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 7 டாக்டர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு.....

வேலை நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 7 டாக்டர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு…..

மத்திய பிரதேசத்தில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ துறை பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

டாக்டர்

இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில் பணி நேரத்தில் சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் நர்சிங்புரில் உள்ள மருத்துவமனையில் பணி நேரத்தில் அங்கு இல்லாத 7 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவிலியர்கள்

இது குறித்து நரசிங்புர் எஸ்.பி. குர்கரன் சிங் கூறுகையில், நரசிங்புர் மருத்துவமனையில் பணி நேரத்தில் அங்கு இல்லாத 7 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அனுமதியோ அல்லது விடுமுறை பெறாமல் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

Most Popular

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன்...

கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று முதல்வர் கூறுவார்- துரைமுருகன்

திமுகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““காவேரி - குண்டாறு திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வரும் 2021 ஜனவரியில் தொடங்கி நிறைவேற்றப்படும்” என்ற அறிவிப்பை இராமநாதபுரத்தில் மாண்புமிகு...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன்...
Do NOT follow this link or you will be banned from the site!