Home இந்தியா வேலையில்லாமல் 47 கோடி பேர்..... சமூக அமைதியின்மைக்கு அதுதான் காரணம்.... எச்சரிக்கும் ஐ.நா....

வேலையில்லாமல் 47 கோடி பேர்….. சமூக அமைதியின்மைக்கு அதுதான் காரணம்…. எச்சரிக்கும் ஐ.நா….

உலகம் முழுவதுமாக தற்போது 47 கோடி பேர் வேலையில்லாமல் அல்லது தகுதி குறைந்த வேலை செய்கின்றனர். சமூக அமைதியின்மைக்கு இதுதான் முக்கிய காரணம் என ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது ஆண்டு உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக முழுவதுமாக தற்போது 47 கோடி பேர் வேலையில்லாமல் அல்லது தகுதி குறைந்த வேலை செய்கின்றனர். நல்ல அல்லது ஒழுக்கமான வேலைகள் கிடைக்காதது தான் சமூக அமைதியின்மைக்கு முக்கிய காரணம்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இந்த ஆண்டில் (2020) வேலையில்லை என பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 19.05 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் வேலையில்லாமல் பதிவு செய்தவர்களின்  எண்ணிக்கை 18.8 கோடியாக இருந்தது. அதேசமயம், உலகம் முழுவதும் 28.5 கோடி பேர் அவர்கள் விரும்பியதை காட்டிலும் குறைவாகவே வேலை செய்பவர், புதிய வேலை தேடுவதை விட்டு விடுவார்கள் அல்லது தொழிலாளர் சந்தையில் அணுகல் இல்லாதது இருக்கும்.

வேலையில்லாதோர்

15 முதல் 24 வயது வரையிலான பிரிவில் 26.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இல்லாமல் உள்ளனர். மேலும் இந்த வயது பிரிவில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் தரமற்ற வேலை நிலைமைகளை சகித்து கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இன்று வேட்பாளர்களை இன்டர்வியூ எடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக கட்சிகள் கூட்டணி...

’1989ல் ஜெயலலிதா எடுத்த முடிவு’ சசிகலா விலகலுக்கு இதுதான் காரணம்!

சசிகலா போல் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், நான்...

“சசிகலா முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்” : கே.பி.முனுசாமி

ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சி என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார்...

பா.ஜ.க.வை காப்பியடிக்கும் காங்கிரஸ்.. சமாஜ்வாடியை எதிர்பார்ப்புகளுடன் பார்க்கும் மக்கள்.. அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வை காங்கிரஸ் காப்பியடிக்கிறது, சமாஜ்வாடி கட்சியை மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்ப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும்,...
TopTamilNews