வேலூரில் நாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தருவார்களா? சீமான் ஆவேசம்!

மோடி ராகுல்  இருவரில் யார் வந்தாலும் எந்த மாற்றமும் நடைபெறாது  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை:  மோடி ராகுல்  இருவரில் யார் வந்தாலும் எந்த மாற்றமும் நடைபெறாது  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். அதே போல் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். 

seeman

அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ‘ தேர்தல் ஆணையம் பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகிறது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முறைகேடு செய்த வாக்காளரைத் தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்திருக்கக் கூடாது. நாங்கள் வேலூர் தொகுதியில் குறிப்பிட்ட தொகையை விடக் குறைவாகத் தான் செல்வது செய்தோம். ஆனாலும் அந்த தொகையைத் தேர்தல் ஆணையம் திருப்பி தருமா? என்றார்.

rahul

தொடர்ந்து பேசிய அவர்,  மோடி அல்லது ராகுல் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவித மாற்றம் நடைபெறுவதில்ல. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை என்று குறிப்பிட்டார். 

இதையும் வாசிக்க : ஒருவிரல் புரட்சி செய்த அரசியல் கட்சி தலைவர்கள்: புகைப்படங்கள் உள்ளே!
 

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!