Home இந்தியா வேதகாலத்தில் கார் இருந்தது… துரியோதனனின் சகோதரர்கள் டெஸ்ட் ட்யூப் பேபிகள் : குஜராத்தி பள்ளியில் பாடம்!

வேதகாலத்தில் கார் இருந்தது… துரியோதனனின் சகோதரர்கள் டெஸ்ட் ட்யூப் பேபிகள் : குஜராத்தி பள்ளியில் பாடம்!

ஏற்கனவே காந்தி கொல்லப்பட்ட தேதியை தவறாக குறிப்பிட்டும்,இஸ்லாமிக் இஸ்லாமாபாத் என்று இல்லாத நாடுபற்றி பாடம் நடத்தியும்,அமெரிக்கா மீது ஜப்பான்தான் முதலில் அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக வரலாறு கற்பித்தும் புகழ்பெற்ற குஜராத் பள்ளிக் கல்வித்துறை இப்போது புது பொய்களுடன் களமிறங்கி இருக்கிறது!

ஏற்கனவே காந்தி கொல்லப்பட்ட தேதியை தவறாக குறிப்பிட்டும்,இஸ்லாமிக் இஸ்லாமாபாத் என்று இல்லாத நாடுபற்றி பாடம் நடத்தியும்,அமெரிக்கா மீது ஜப்பான்தான் முதலில் அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக வரலாறு கற்பித்தும் புகழ்பெற்ற குஜராத் பள்ளிக் கல்வித்துறை இப்போது புது பொய்களுடன் களமிறங்கி இருக்கிறது!

ஆர்.எஸ்.எஸ்ஸின் வித்யாபாரதி என்கிற கல்விக்கான பிரிவில் தேசிய நிரிவாகியாக இருக்கும் தின்னாத் பந்தரா என்பவர் எழுதிய ஒரு நூலை குஜரத்தியில் மொழி பெயர்த்து ஆரம்ப பள்ளி மற்றும்,நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான துணை நூலாக வெள்யிட்டிருக்கிறது குஜராத் கல்வித்துறை.

school

அந்த 125 பக்க புத்தகத்தில் உள்ள சில அதிர்ச்சி தகவல்கள்.ஸ்டெம்ப்செல்  டெக்னாலஜியின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடப் பார்க்கிறது.ஆனால், இந்தியாவை சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ண கன்பத் மட்டப்புர்கர் உடல் பாகங்களை உருவாக்கும் காப்புரிமை பெற்றிருக்கிறார்.அவருக்கு இண்ஸ்பைரேசனே மகாபாரத்தில் இருந்துதான் கிடைத்திருக்கிறது.

காந்தாரிக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டு வெளிப்பட்ட சதை பிண்டங்களை, வியாச ரிஷி நூறு தொட்டிகளில் போட்டு நெய்யில் மூழ்க விட்டு இரண்டு வருடங்களில் நூறு கெளரவர்களை உருவாக்கிய கதையை படித்த போதுதான் டாக்டர் பாலகிருஷ்ணாவுக்கு அந்தக்காலத்திலேயே இதெல்லாம் நம் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிந்தது.

school

அடுத்தது வேதகாலத்து ஆட்டோ மொபைல் டெக்னாலஜி குறித்து அவர்கள குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் பாடம் இது. நாம் நினைப்பது போல மோட்டார் கார்கள் நவீன பொறியியல் கண்டுபிடிப்பு அல்ல.வேதகாலத்திலேயே மோட்டார் கார்கள் இருந்தன.குதிரைகள் இழுக்கத் தேவையில்லாத இந்த ரதங்களுக்கு அனஸ்வ ரத் என்று பெயரிட்டிருந்தார்கள்.அனஸ்வ ரத் என்றால் குதிரை தேவையில்லாத ரதம் என்று பெயர்.இது ரிக் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறது அந்த துணைப்பாட நூல்.

இது பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது,’ இது இந்தியக் கலாச்சாரம் பற்றிய ஒரு அறிமுகம்தான்.இதிலிருந்து தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படாது’ என்று பதிலளித்திருக்கிறது,குஜராத் கல்வித்துறை.

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...

திடீர் உடலநலக்குறைவால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார்...

50 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு காங்கிரஸ் கடிதம்! 20 தான் முடியும் என்கிறது திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின்...
TopTamilNews