வேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை ! முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை !

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையாலும், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 222 கனஅடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 52 அடியை எட்டியுள்ளது. ஆகவே ஆற்றங்கரையோ மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுப்பணித்துறை.

manjalaru

மஞ்சளார் ஆற்றங்கரையோர கிராமங்கள் ஆன கெங்குவார்பட்டி, பு.கல்லுப்பட்டி, வத்தக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டும்போது இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், 55 அடியை எட்டும்போது 3 வது கட்ட இறுதி எச்சரிக்கை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை படிப்படியாக உயரும் பட்சத்தில் உபரி நீரும் படிப்படியாக ஆற்றில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Most Popular

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...

வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தற்போதைய இபாஸ் நடைமுறை தொடரும்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், இன்று இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தார். அதாவது திருமணம்,...
Do NOT follow this link or you will be banned from the site!