வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை காரணமாகச் சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலியாகினர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

rain

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு  ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இன்று மும்பை வரவேண்டிய 54 விமானங்களில் அருகிலுள்ள விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில்  கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் இன்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் குழுவினர்  மீட்புப்பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து  உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இதே போல் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும், புனேவில்  கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேரும் பலியாகியுள்ளனர். 

rain

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் ஜூலை 2,4 மற்றும் 5ஆம் தேதிகளில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Most Popular

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...