Home உலகம் வெட்டுக்கிளியால் அவதியுறும் பாகிஸ்தான் – அவசர நிலை பிரகடனம்

வெட்டுக்கிளியால் அவதியுறும் பாகிஸ்தான் – அவசர நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்: பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் பரவியதால் அங்கு தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்கு தற்போது இந்தியாவை காட்டிலும் முதன்மையான எதிரியாக வெட்டுக்கிளிகள் மாறியுள்ளன. இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து வருகின்றன. வயல்வெளிகளையும் வெட்டுக்கிளிகள் விட்டு வைக்கவில்லை. இதனால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாறியதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகி இருப்பதாக தெரிகிறது.

ttn

இதனால் பாகிஸ்தானில் வரலாறு காணாத கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. உணவுப் பொருட்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தை மாத பிரதோஷ வழிபாடு… சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…

விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில், தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல, வனத்துறை அனுமதி...

அதிமுக அல்லது பாஜகவில் இணைவது உறுதி! அடுத்த முதல்வர் பழனிசாமிதான்- கராத்தே தியாகராஜன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினி, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலுக்கு வரவில்லை.இதன் காரணமாக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்....

விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

விருதுநகரில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார், நிகழ்ச்சியில்...

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் அதிமுக கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Do NOT follow this link or you will be banned from the site!