Home இந்தியா வெங்காயம் விலை ரூ.150 வரை விற்பனை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வெங்காயம் விலை ரூ.150 வரை விற்பனை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று வெங்காயத்தின் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.100 முதல் 150 வரையில் பெரிய வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிராவிலும், கர்நாடக மாநிலங்களிலும் இந்த ஆண்டு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழையால் பெரும்பாலான வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தன. 

onion

மக்களின் தேவைக்கேற்ப வெங்காயத்தின் உற்பத்தி இல்லாததால், நாடு முழுவதும் பெரிய வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டன் கணக்கில் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் அரசு முடிவு மேற்கொண்டது. ஆனாலும், மக்களின் வெங்காயத் தேவையை நிவர்த்தி செய்ய முடியாததால், தொடர்ந்து வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளன. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ. 150 ரூபாய் வரை விற்கப்படுவதை அறிந்து பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்து அசைவ உணவை தவிர்த்து வருகிறார்கள். வரும் தை மாதம் முடியும் வரையில் வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

வெங்காயம் விலை ரூ.150 வரை விற்பனை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews