விஸ்வரூபம் எடுக்கும் அஜித் தோவல் வீடியோ! யாரையும் விலைக்கு வாங்கலாம்… சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ் தலைவர்

யாரையும் விலைக்கு வாங்கலாம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீடியோ குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும், அங்கு அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எதற்கு இதெல்லாம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. அதற்கான விடை அதற்கு அடுத்தநாள் தெரிந்தது.

அஜித் தோவல்

கடந்த திங்கட்கிழமையன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வாரி வழங்கிய 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. அன்றே மாநிலங்களவையில் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமையன்று மக்களவையில் அந்த மசோதா  நிறைவேற்றப்பட்டது.

 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் சாலை ஒரத்தில் அங்குள்ள மக்களிடம் பேசும், உணவு சாப்பிடும் மற்றும் பாதுகாப்பு படைகளுடன் உரையாடிய வீடியோ, போட்டாக்கள் வெளியானது. நேற்று முழுவதும் அது இன்டர்நெட்டில் வைரலானது.

குலாம் நபி ஆசாத்

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்துதான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத். இன்று விமான நிலையத்தில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அந்த வீடியோ செட்அப். யாரையும் விலைக்கு வாங்கலாம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

குலாம் நபி ஆசாத்தின் கருத்துக்கு பா.ஜ. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க  வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....