Home சினிமா விஷால் பட இயக்குநரோடு கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் 

விஷால் பட இயக்குநரோடு கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து வரிசையாகக் கையில் 4 படங்கள் வைத்து இருக்கும் இவர் தற்போது  பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயன்

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
முன்னதாக வெங்கட் மோகன் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து- நரிக்குறவர்கள் 4 பேர் படுகாயம்

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் வேட்டைக்காக நாட்டுவெடி குண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

சசிகலா உடல்நிலையில் தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை!

சசிகலாவு உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா நாளை விடுதலையாகவிருக்கிறார்....

“ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?” – கமல் ஹாசன் கண்டனம்!

குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர்...

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்!

72 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நம்...
Do NOT follow this link or you will be banned from the site!