Home சினிமா விஷாலுக்கு 'ரொமான்டிக்'காக அனிஷாவின் காதலர் தின வாழ்த்து

விஷாலுக்கு ‘ரொமான்டிக்’காக அனிஷாவின் காதலர் தின வாழ்த்து

ரொமான்டிக் புகைப்படத்துடன் காதலர் விஷாலுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிஷா ரெட்டி

சென்னை: ரொமான்டிக் புகைப்படத்துடன் காதலர் விஷாலுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிஷா ரெட்டி.

காதலர் தினத்தன்று அனிஷா ரெட்டி தனது வருங்கால கணவரும், காதலருமான விஷாலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷால் பேச்சுலராக கொண்டாடிய கடைசி காதலர் தினம் இது தான். அடுத்த ஆண்டு காதலர் தினத்தின்போது அவர் அனிஷாவின் கணவராக இருப்பார்.

vishalanisha

அனிஷா காதலர் தினத்தன்று விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து காதல் என்றால் என்ன என்று பெரிய விளக்கமே அளித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். மேலும் தான் விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அனிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா, அருமை என்கிறார்கள். மேலும் வீட்டில் சொல்லி விஷாலுக்கும், அவருக்கும் சுத்திப் போடுமாறும் தெரிவித்துள்ளனர்.

vishalanisha

அனிஷா தைரியமான பெண். விஷாலை திருமணம் செய்யப் போவது அறிந்து அவரை பலரும் கலாய்த்தபோது கூட அதை பார்த்து கடுப்பாகாமல் நச்சென்று பதிலடி கொடுத்தார் அவர்.

vishalanisha

நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்த பிறகே திருமணம் என்பதில் விஷால் உறுதியாக உள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் விஷால், அனிஷா திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Most Popular

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது என்பதை ஒரு விவசாயின் மகனாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...
Do NOT follow this link or you will be banned from the site!