விஷாலுக்காக 10 அமைச்சர்கள் வேலை பார்க்கிறார்கள்- கருணாஸ் அதிரடி!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட கூடாது, என்பதற்காக பத்து அமைச்சர்கள் வேலை செய்கின்றனர் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட கூடாது, என்பதற்காக பத்து அமைச்சர்கள் வேலை செய்கின்றனர் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 

ஜூன் 23 ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூத்த நடிகர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் மற்றும் கருணாஸை ஆகியோரை 250க்கும் அதிகமான துணை நடிகர்கள் சந்தித்து பேசினர். மேலும் தேர்தலில் நாசர் தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,  “விஷால் தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு  நடிகர் சங்கத்துக்கும் நலிந்த கலைஞர்களுக்கும் நல்ல பல சேவைகளை செய்து வருகின்றனர்.  ஆனால் விஷால் நடிகர் சங்க தேர்தலில்  போட்டியிட கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். விஷால் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்தார்.  அவர் போட்டியிட கூடாது, அதற்காக பத்து அமைச்சர்கள் வேலை செய்கின்றனர்.

நடிகர் கட்டடத்தின் வேலைகள் நின்றுவிடக் கூடாது என்பதால் நடிகரும் பொருளாளருமான கார்த்தி ஒரு கோடியும் விஷால் 50 லட்சமும் கொடுத்துள்ளனர். சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் ஒரே சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டும்தான்” எனக் கூறினார். 

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...