Home சினிமா விவேக்கின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த ஷங்கர் 

விவேக்கின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த ஷங்கர் 

நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் நடிகர் விவேக். எதார்த்தமான தனது நகைச்சுவை தன்மையோடு சமூகத்திற்குக் கருத்தும் சேர்த்துச் சொல்வதால் இவருக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் இதுவரை பல முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால் தான் இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவே இல்லை என்று ஒரு முறை பேட்டியில் தெரிவித்தார். 

இந்த நிலையில் தற்போது அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ஆம்… ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

indian 2

இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூத் ஜாம்வால் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.  
 

Most Popular

ஆம்னி பேருந்துகள் எப்போது ஓடும்? அரசிடம் பேருந்துகளை ஒப்படைக்க முடிவு? : ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப்...

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யவில்லை! உபி போலீசார் பகீர் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...

”தென்கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனத்துக்கு கூடுதல் வரி?”

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும்...

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!