Home சினிமா விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்!

விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். 

விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தான் மனைவியை ஏன் விவாகரத்து செய்தேன் என்பது பற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார். 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. 

அதைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தனது கல்லூரி தோழி ரஜினி என்ற பெண்ணை திருமணம்  கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். 

visnu vishal

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு இறுதியில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

visnu vishal

ஆனால்,விவகாரத்திற்கான காரணத்தைச் சொல்லாமல் மௌனம் காத்து வந்த விஸ்ணு விஷால் தற்போது முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார். அதில்’ நான் என்னுடைய வாழ்க்கையில் உணர்ந்த விஷயம் என்ன வென்றால் எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம் எனது திருமணம். ஆனால் அதுவும் இப்போது இல்லை.

விவாகரத்தினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் பல காலம் என்னுள் இருக்கும். துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். ஆனால் அப்படி இருந்தால் சினிமாவில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சகஜமாகப் பழகினேன். படத்தில் காதல் காட்சிகள் சிறப்பாக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சக நடிகைகளுடன் சகஜமாகப் பழகினேன். அப்போது தான் இந்தப் பிரச்சினை ஆரம்பமானது. நீ முன்பு இருந்தது போல் இல்லை மாறிவிட்டாய் என்ற பேச்சில் ஆரம்பித்து. 

vishnu vishal

பின்பு நான் காதலித்த நபர் நீ இல்லை எனும் அளவுக்குச் சென்றது விட்டது. இப்போதும் எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். அவரும் என்னைப் புரிந்து கொள்வார். அவர் மிகவும் நல்லவர். எனது மனைவிக்கு நான் எப்படிப்பட்டவன் என்பது நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார். 

விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள...

குணமடைந்த ரங்கசாமி… தேங்காய், பூசணிக்காய் உடைத்து தொண்டர்கள் வரவேற்பு!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன்...

பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி; கமல் புகழஞ்சலி

கரிசல் இலக்கிய தந்தை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக...

இ-பதிவு இணையதளத்தில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்!

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம்...
- Advertisment -
TopTamilNews