Home தமிழகம் விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

சென்னை: உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், விவசாயிகளது விளை நிலங்களில் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தனியார் மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு இத்தகைய மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

மின்கோபுரம் அமைப்பதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திட,  மின்கோபுரங்கள் அமைப்பதற்கு மாறாக, கேபிள்கள் மூலம் மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென கடந்த பல மாதங்களாக விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை செவி மடுக்க மறுத்து வருவதுடன், விவசாயிகள் அனுமதி பெறாமலேயே விளை நிலங்களில் மின்கோபுரங்களை அமைத்து வருகிறது.

இதனை எதிர்த்து கடந்த 2019 மார்ச் 15 அன்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. முனுசாமி, மாவட்டச் செயலாளர் கே. பெருமாள், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஈசன், துணைத்தலைவர் கவின், தற்சார்பு விவசாய சங்க தலைவர் கி.வெ. பொன்னையன் மற்றும் 7 விவசாயிகளையும் சேர்த்து 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும் வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பொள்ளாச்சியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்வதற்கு தயங்கும் தமிழக அரசு, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பது அடக்குமுறையின் உச்சமாகும்.

மீண்டும், மீண்டும் விவசாயிகளை கைது செய்து, சிறையில் அடைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்

உலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

நான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...

டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…

கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இதனை பின்பற்றவில்லையென்றால் அபராதம் மற்றும் 3 மாத காலத்துக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அம்மாநில...
Do NOT follow this link or you will be banned from the site!