Home தமிழகம் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு... புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்த வேளாண் பல்கலை.

விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு… புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்த வேளாண் பல்கலை.

தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழக வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இந்த ஆண்டு நெல் கோ 53, நெல் ஏடீடி 54, கரும்பு சிஒசி 13339, பருத்தி கோ 17, உளுந்து வம்பன் 11, சோளம் கோ32, திணை ஏ டி எல் 1, வாழை கோ2, தக்காளி கோ4, சிறிய வெங்காயம் கோ6, மரவள்ளி ஒய்டிபி2, கொடுக்காப்புளி பிகேஎம் 2 மற்றும் மணத்தக்காளி 1 என்ற புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

agriculture

நெல் பிரிவில் இரண்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோ 53 என்பது வறட்சி பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வறட்சியைத் தாங்கி வளர்ந்து, விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். மற்றொரு நெல் ரகமான ஏடிடி 54 மத்திய கால ரகமாகும். இதுவும் அதிக மகசூலைத் தரும் அரவைத் திறன் கொண்ட நெல் ரகமாகும்.

paddy

இது தவிர இரண்டு ஒட்டு வாழை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ 2 என்ற பூவன் வாழை ரகம் எக்டருக்கு 32 டன் மகசூல் தரும். மேலும் வாழையைத் தாக்கும் நூற் புழு மற்றும் வாடல் நோய் எதிர்ப்புத் திறன் இந்த வாழைக்கு அதிகம்.
மரவள்ளியில் ஒய்டிபி 2 என்ற ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்டருக்கு 46.2 டன் கிழங்கைத் தரும். இதில் மாவு சத்து 30 சதவிகிதம் தான் இருக்கும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.

cassava

மணத்தக்காளி கோ1 ரக கீரை எக்டருக்கு 30 முதல் 35 டன் மகசூலைக் கொடுக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச் சத்து மிகுந்த கீரை என்பதால் மருத்துவ பயன் அதிகம் கொண்டது. இதை வீடுகளில் மாடித் தோட்டத்தில் கூட வளர்க்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். ஒரு தொகுதிக்கு ரூ.30 லட்சம் மட்டுமே செலவிட வேண்டுமென...

விருதுநகர் மாவட்டத்தில் 28 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக சீல்வைப்பு!

விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக சீல் வைக்க, மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டார்.

5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன....

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
TopTamilNews