Home சினிமா விமானியை கரம்பிடித்தார் ’சுப்ரமனியபுரம்’ நாயகி சுவாதி ரெட்டி!

விமானியை கரம்பிடித்தார் ’சுப்ரமனியபுரம்’ நாயகி சுவாதி ரெட்டி!

ஹைதராபாத்: ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுவாதி ரெட்டி தனது காதல் விகாஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமான சுவாதி, கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் இல்லை. இதைத் தொடர்ந்து சுவாதிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.

நடிகை சுவாதி ரெட்டி

இந்நிலையில், சுவாதியின் நண்பர் விகாஸ் என்பவர் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து, இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த ஆக.30ம் தேதி ஹைதராபாத்தி;ல் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு நாளை செப்.2ம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.

நடிகை சுவாதி ரெட்டி

திருமணத்திற்கு பின்னர் இந்தோனேசியாவில் தனது கணவருடன் சுவாதி குடியேறவிருப்பதாகவும், நடிப்பை தொடர விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Swathi #SwathiMarriage #Vikas #SwathiReddy

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews