விடுதலைக்குத் தயாரானது கார்த்தியின் கைதி! 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநகரம் படத்தின் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாகக் கதாநாயகிகள் யாரும் இல்லை. ஒரு இரவில் நடக்கும் நிகழ்வை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் லோகேஷ் இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கைதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் அதில் குறிப்பிடவில்லை. 

முன்னதாக இந்த படம் விஜயின் பிகில் படத்துடன் தீபாவளி ரேஸில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...