Home சினிமா விஜய் அரசியலுக்கு வந்தே தீரனும்... ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட பகீர் ட்விட்டர்...

விஜய் அரசியலுக்கு வந்தே தீரனும்… ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட பகீர் ட்விட்டர்…

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி63 படத்தின் டைட்டில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 

தளபதி விஜயின் பிறந்தநாள் க்வுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியுள்ள நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ‘தரணி ஆள வா தளபதி’ போஸ்டர் டிசைன் வலைதளங்களில் படு ஸ்பீடாக வைரலாகிவருகிறது.

vijay

தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வரிசையில் அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தளபதி63. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கும் மற்றும் 22ம் தேதி நள்ளிரவு 2ஆவது லுக்கும் வெளியாகவிருப்பதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி63 படத்தின் டைட்டில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 

vijay

கில்லி மற்றும் அழகிய தமிழ் மகன் படங்கலுக்கு அடுத்து விஜய் இப்படத்தில் விளையாட்டுக் கதையில் நடித்துள்ளார். அதுவும், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என்று இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஒரு காட்சியில் அப்பாவும் மகனும் ஒரே காட்சியில் இணைந்து நடிக்க இருக்கின்றனராம். 

 

இந்த நிலையில்,  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு என்று வடிவமைக்கப்பட்ட காமன்டிபி (VijayCommonDP) போஸ்டரை வெளியிடுவது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.விஜய் தனது வலது கையை உயர்த்தியதோடு நிற்கும் போஸ்டரில், ஏராளமான விளையாட்டு வீரர்கள் அவரை சூழ்ந்து இருப்பது போன்றும் அந்த காமன்டிபி போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

vijay

அந்தப் போஸ்டரை கிளிண்டன் ரோச் என்பவர் வடிவமைத்துள்ளார் .  இந்த போஸ்டரில், தரணி ஆள தளபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது விஜயை அரசியலுக்கு சீக்கிரம் வாங்க என்று வற்புறுத்தும் வலையில் உள்ளது

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews