விஜய்யின் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை..! நடிகர் சல்மான் கானின் சுவாரஸ்ய பதில்!

சல்மான் கான் இப்படத்தைத் தயாரித்தும் உள்ளார்.  படத்தின்  தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

நடிகர் சல்மான் கான் விஜய்யின் எந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

salman

சல்மான்கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் தபாங். இப்படம் வெளியாகி வெற்றி பெற்ற  நிலையில்  கடந்த 2012 ல் தபாங் 2 படம் வெளியானது. இதுவும் வசூல் சாதனை படைத்தது. தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 உருவாகி வருகிறது.   சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படத்தில் நடித்துள்ளனர். சல்மான் கான் இப்படத்தைத் தயாரித்தும் உள்ளார்.  படத்தின்  தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

salman

இந்நிலையில் தபாங் 3 படத்தின் புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்கான நடிகர் சல்மான் கான்  கான்ஃபிரன்ஸ் மூலம் சென்னை பத்திரிக்கையாளர்களை சல்மான்கான் சந்தித்தார்.அப்போது அவரிடம் விஜய்யின் எந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சல்மான், தமிழ் படங்கள் டப் செய்யப்பட்டு இங்கு ஒளிபரப்பப்படுகின்றன. மக்களும் அதை ரசிக்கின்றனர். விஜய்யின் ‘தெறி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்கள்  குறித்து பிரபு தேவாவிடம் கேட்டுள்ளேன்’ என்றார். 

vijay

முன்னதாக தபாங் 3 வருகிற டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மூன்று மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!

இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக வந்ததது கோழிக்கோடு விமான விபத்து. துபாயிலிருந்து...

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது. 191...

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...