Home சினிமா விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

seethakathi

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் நாளை இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் என புகார் தெரிவித்து கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

கோவை சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பரப்பியதாக திமுகவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகள் பிடித்திருக்கிறது. மிகவும் பிரபலமான 10...

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்!

நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்...

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மதுரை அருகே கோழி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி...
Do NOT follow this link or you will be banned from the site!