Home சினிமா விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி! பட்டய கிளப்பும் புகைப்படம்!! 

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி! பட்டய கிளப்பும் புகைப்படம்!! 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

master vijay

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.  கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின்  குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது.   சமீபத்தில் இப்படத்தை குறித்து விருது விழா ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் எல்லா சீனும் Fireஆ இருக்கும் என தெரிவித்திருந்தார்.

vijay

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமாரின் பிறந்தநாள் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்குமாரை விஜய் சேதுபதி தனது பாணியில் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த விஜய், விளையாட்டாக எனக்கு ஒரு முத்தம் என்று கேட்க, விஜய் சேதுபதி விஜய்க்கு கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

பாஜகவின் ஆதரவாளர்களை விட எதிர்ப்பு தெரிவிப்பவர்களே தமிழகத்தில் அதிகம். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக,...

“அதிமுக-பாஜக கூட்டணி இத்துப்போன காய்லாங்கடை இஞ்சின்”- கிண்டலடித்த கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அனல் பறக்கிறது. இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் இந்திய கம்யுனிஸ்ட்...

எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையில் பெரும்பாலானோர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு...

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
TopTamilNews