Home தமிழகம் விஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..! தேமுதிகவுக்கு வந்த சோதனை..!

விஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..! தேமுதிகவுக்கு வந்த சோதனை..!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் ப்ளைட் பிடித்து சிகிச்சைக்காக கிளம்ப இருக்கிறார். இந்த நேரத்தில் தான் பொல்லாத பரிதாபத்தில் சிக்கி இருக்கிறார் பிரேமலதா.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் ப்ளைட் பிடித்து சிகிச்சைக்காக கிளம்ப இருக்கிறார். இந்த நேரத்தில் தான் பொல்லாத பரிதாபத்தில் சிக்கி இருக்கிறார் பிரேமலதா. 

விஜயகாந்த் அதிரடி அரசியலுக்கு பேர் போனவர். அவரது பேச்சுகளும், செயல்பாடுகளும் மீடியாக்களில் கவனம் பெற்றவை. அடுத்தடுத்த அவரது செயல்பாடுகள் கேலிக்கு உரியதாகின. ப்ரஸ் மீட்டில் பத்திரிக்கையாளர்களை அடிக்கப்பாய்ந்தது.  மேடைகளில் திடீரென கண்ணீர் விட்டு கலங்குவது, சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அடிக்கப்பாய்ந்தது…  கட்சி நிர்வாகிகளை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் பளார் விட்டது… யோகா பயிற்சியின் போது குழந்தைத் தனமாய் நடந்து கொண்டது என என  தேமுதிக தலைவர் விஜயகாந்தை,  ‘மீம்ஸ்’ போட்டு, சமூக வலைதளங்கள்ல கடுமையா கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.பிரேமலதா

அவரது உடல்நலம்  உடல்நலம் குன்றிப்போய் அதிரடி அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதால் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் வெளிவருவதில்லை.  ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி பிரேமலதாவை டார்க்கெட் செய்ய ஆரம்பித்து இருக்கிறார் மீம்ஸ் கிரியேட்டர்கள். மீம்ஸ்

பிரேமலதா அம்மணி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு… அதில் செய்தியாளர்களை ஒருமையில் பேசியது…  கூட்டணியை உறுதி செய்யாமல் இரு பிரதான கட்சிகளிடம் ஒரே நேரத்தில் கூட்டணிக்கு தூது விட்டது. பிரச்சாரத்தில் பாஜக, அதிமுகவினரை பற்றி உளறிக் கொட்டியது…. மக்கள் தன்னை ஜெயலலிதாவாக நினைக்கிறார்கள் என ஸ்டேட்மெண்ட் விட்டது என  அண்ணியாரை கிண்டலத்து  மீம்ஸ்களை போட்டு தாளித்து வருகிறார்கள். இதனால், எரிச்சலடைந்துள்ள அண்ணியார் மீம்ஸ் கிரியேட்டர்களை ஒடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸாரிடம் மனுக்கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.  மீம்ஸ்

அதுவும் விஜயகாந்தை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் முன் இந்த மனுவை அளிக்க இருக்கிறாராம். மீம்ஸ் விவகாரத்தில் விஜயகாந்த் மாட்டிக் கொண்டதைப்போல இப்போது அவரது மனைவி பிரேமலதா சிக்கிக் கொண்டு விட்டாரே என தேமுதிக தொண்டர்கள்  முணுமுணுத்து வருகிறார்கள். 

மாவட்ட செய்திகள்

Most Popular

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...

மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி ஊழியர் பலி!

ஈரோடு ஈரோடு அருகே கிரக பிரவேசத்திற்கு மா இலை பறிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி, பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு...

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை

முதல்வர் பழனிசாமியின் பரப்புரைக்கு அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும்...

’’ஓசிமணி’’- வறுத்தெடுக்கும் பாஜக

முதலில் வதந்தியை கிளப்பி விட்டு ஊசி ஓசி என்றவுடன் சத்தமில்லாமல் போட்டுச் செல்லும் தமிழகத்தின் ஓசி மணி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சாடியிருக்கிறார் பாஜக தகவல் தொழில்நுட்ப...
TopTamilNews