Home அரசியல் விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்!

விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்!

ஐஎன்எக்ஸ் வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்!

புதுடெல்லி:  ஐஎன்எக்ஸ் வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

chithambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்வதைத் தடுக்க,  ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில் சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அப்போது, அமலாக்கத் துறையினர் ஏற்கனவே மூன்று நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான பொய் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் 11 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் இன்னும் ஆவணங்களைச் சிதைக்க என்ன இருக்கிறது? இந்த வழக்கு 2009ம் ஆண்டுதான் கொண்டு வரப்பட்ட  சட்டத்திருத்தத்தின் படி பதியப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வை அதற்கு முன் தேதியிட்டு குற்றமாக எப்படிக் கருத முடியும்? என்று சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார். 

singhvi

சிதம்பரம் தரப்பின் வாதங்களுக்குப் பதில் தர தமக்கு அவகாசம் தேவை என அமலாக்கத்துறை வழக்கறிஞர்  கேட்டுக்கொண்டதை அடுத்து வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.முன்னதாக  இன்று விசாரணை முடியும் வரை சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...

‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும்...

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ...

“தெருநாய்களுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு” – பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய...
- Advertisment -
TopTamilNews