Home அரசியல் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க 150 கோடி...புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை..!? வரிந்து கட்டும் வ.கௌதமன்..

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க 150 கோடி…புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை..!? வரிந்து கட்டும் வ.கௌதமன்..

அதிமுக 75 கோடியும் திமுக 75 கோடியும் வாக்குக்குக் கையூட்டு தருகிறார்கள்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி நடக்கவுள்ளது. இடைத்தேர்தல் களங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடந்த 14 ஆம் தேதி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்குக்காக மக்களுக்குப் பணம் கொடுப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் அளித்தார்.

complaint

அதற்கு ஆட்சியர் சுப்பிரமணியன் தேர்தல் அறிவித்த பின்பு எந்த பணமும் உள்ளே வர வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முன்னரே பணம் கொண்டு வரப் பட்டிருந்தால் அதற்கு என்ன செய்ய முடியும் என்று தெரிவித்ததாக வ.கௌதமன் செய்தியாளர்களிடம் கூறினார். 

complaint

அதனையடுத்து, இன்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகருக்கு, ‘அதிமுக 75 கோடியும் திமுக 75 கோடியும் வாக்குக்குக் கையூட்டு தருகிறார்கள், இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் தகவல் அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், விக்கிரவாண்டி வேட்பாளருமான வ.கெளதமன் கடிதம் எழுதியுள்ளார்.

Protest

மேலும், வாக்குக்குக் கையூட்டு தந்ததாக முதல்வர்,  துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து, சாலை மறியல் போராட்டத்தில் வ.கௌதமனும் அவரது கட்சி தொண்டர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் வீரர் விலகல்

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், நடந்து முடிந்த 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு...

கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திண்டுக்கல் மாவட்ட கனிமவள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்...

நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது! எச்சரிக்கும் மாஜி திமுக அமைச்சர்

சமூக வலைதளங்களில் பொய் புகார்களைப் பரப்புவதால் நான் அஞ்சமாட்டேன். ஆதாயம் தேடிவிடலாம் என்ற நரித்தனமும், நப்பாசையும் எடுபடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் திமுக அமைச்சரும், திமு கழக துணைப்...

டிரான்ஸ் கிச்சன் உரிமையாளர் திருநங்கை சங்கீதா படுகொலை

கோவையில் பிரபல பிரியாணி கடையை தொடங்கி நடத்தி வந்த திருநங்கை சங்கீதா, வீட்டில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து...
Do NOT follow this link or you will be banned from the site!