Home சினிமா “வாழ்க்கை ஓர் அழகான பயணம்”... பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!

“வாழ்க்கை ஓர் அழகான பயணம்”… பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா, கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த படம், ஓம். இப்படத்தை அவரிடம்  உதவி இயக்குநராக இருந்த நிர்மல்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  அவருக்கு சலீம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இதிலிருந்து விலகினார்.  எனவே இப்படத்தை பாரதிராஜாவே மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் இயக்கி தயாரிக்கிறார். இதில் நடிகை மவுனிகா, நடிகர் ஜோ மல்லூரி, நடிகை ராசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

ஐரோப்பியாவில் வாழும் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து  உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனதால் படத்தின் தலைப்பை ‘மீண்டும் ஒரு மரியாதை’ என பாரதிராஜா மாற்றினார். இப்படம் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதலும், காதலில் ஏற்படும் பிரச்னைகளுமே படத்தின் கருவாக உள்ளது. படத்தின் ட்ரெய்லரின் இறுதியில் பாரதிராஜா , Life is beatutiful Journey என கர்ஜிக்கிறார். அதேபோல் ஓம் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் பாரதிராஜாவின் நடிப்பு, பேசும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசை பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம்… அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ள கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு...

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...
Do NOT follow this link or you will be banned from the site!