Home லைப்ஸ்டைல் வாழைப்பழத்தோலில் இத்தனை அதிசயமா?

வாழைப்பழத்தோலில் இத்தனை அதிசயமா?

வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும்

வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும், இதன் தோல்களை பயன்படுத்தினால் அழகு அள்ளும். வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கவும், மெருகேற்றவும் வாழைப்பழத்தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தோலை வைத்து சில ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே போட்டுக் கொள்ளலாம்.

banana

வாழைப்பழத்தோலுடன் பால் சேர்த்து ஃபேஸ் பேக் செய்வதை பார்க்கலாம். முதலில்  காய்ச்சாத பாலை முகத்தில் தடவி சற்று உலர்ந்ததும் காட்டனால் முகத்தை துடைக்கவும். பின் வாழைப்பழத்தோலின் உள் பகுதியை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுறும்.

banana

வாழைப்பழத்தோல் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி ஒரு 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதனால் முகப்பருக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

banana

வாழைப்பழத்தோலுடன் மஞ்சள் தூள் சேரும் போது முகம் பிரகாசமாகும். வாழைப்பழத்தோலுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். முகப்பரு பிரச்னையால் முகத்தில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். இதை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

banana

வாழைப்பழத்தோலுடன் தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால், முகப்பருக்கள் நீங்கி சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். சருமம் வறட்சியாவதை கட்டுப்படுத்தி முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.

அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து, 67 பயனாளிகளுக்கு ரூ.84.24...

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் வயிற்று வலி காரணமாக விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பென்னாகரம் வட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!