வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்..! மாயமோ மந்திரமோ அல்ல.! அதான் அப்டேட்!! 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.

வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

Whats app

இந்நிலையில் தற்போது நாம் அனுப்பும் மெசேஜுகளை Auto Delete செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் நாம் ஒருவருக்கு தப்பான மெசேஜை அனுப்பிவிட்டால் அதனை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அழிக்கும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது Disappearing Message என்ற வசதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு பின் மெசேஜ்கள் Auto delete செய்யப்படும். உதாரணமாக நாம் வரும் 10 ஆம் தேதி திருமணத்திற்கு செல்ல வேண்டும் என வைத்துக்கொள்ளலாம்… அந்த திருமண அழைப்பிதழ் நம்முடைய வாட்ஸ் அப்பில் ஏற்கனவே இருக்கும்… இந்த திருமண அழைப்பிதல் 10 தேதிக்கு மேல் அதாவது திருமணத்திற்கு தேவைப்படாது. எனவே அது நமது வாட்ஸ் அப்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை… அதனால் அந்த பத்திரிக்கை 11 ஆம் தேதியிலிருந்து என்னுடைய வாட்ஸ் அப்பிலிருந்து நீக்கிவிடு என்பதே இந்த ஆட்டோ டெலிட் வசதி. 

Most Popular

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 35 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்த சம்பவம் நாடு...

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் கார் டிரைவராகவும் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும்...

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளரான துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் திமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பிரபல...