Home உலகம் வாடிய உயிரை கண்டு வாடிய பிரிட்டன் தீயணைப்புத்துறை!

வாடிய உயிரை கண்டு வாடிய பிரிட்டன் தீயணைப்புத்துறை!

விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர், காரின் உரிமையாளர் இன்னமும் வராததைக் கண்டு கார் கண்ணாடியை உடைத்து, நாயை மீட்டெடுக்கிறார்கள். தகிக்கும் காரின் உள்ளேயிருந்து வெளியே மீட்கப்பட்ட நாய்க்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிக்கிறது. கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாலும், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் என்பதாலும் காருக்குள் வெப்பம் தகிக்கிறது. அவ்வழியாக வந்தவர்கள், காருக்கள் ஒரு நாய் வெப்பம் தாங்காமல் குரைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர், காரின் உரிமையாளர் இன்னமும் வராததைக் கண்டு கார் கண்ணாடியை உடைத்து, நாயை மீட்டெடுக்கிறார்கள். தகிக்கும் காரின் உள்ளேயிருந்து வெளியே மீட்கப்பட்ட நாய்க்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்கள்.

Rescued Dog

இதுகுறித்து தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கும் தீயணைப்புத்துறை, வெயில் காலங்களில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ காருக்குள் விட்டுவிட்டு செல்லவேண்டாம். குழந்தைகளாலோ, செல்லப்பிராணிகளாலோ கார் வெப்பத்தை தாங்க முடியாது என அறிவுரை கூறியிருக்கிறார்கள். “நாய்தானே, காருக்குள்ளேயே இருக்கட்டும், உரிமையாளருக்கு இல்லாத அக்கறை, எங்களுக்கென்ன” என இராமல்,  நாயை மீட்டெடுத்த தீயணைப்புத்துறை செயல் பாராட்டுக்குரியது!
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews