Home தேர்தல் களம் வாக்குபதிவின் போது வன்முறை: ஒருவர் கொலை!

வாக்குபதிவின் போது வன்முறை: ஒருவர் கொலை!

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது  திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்

முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது  திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம்  நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி  13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

vote

இதையடுத்து  மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கள்ள ஓட்டுப் போடா முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடியில் திரண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், வாக்களிப்பதற்காக நின்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

mamta

இதே போல் ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் சிலர் நாடு வெடிகுண்டுகளை வீசினர். இதில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

west bengal

இதைத் தொடர்ந்து மோதிகஞ்ச் பகுதியில் பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில்  கட்சியின் முகாம் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் மேற்கு வங்காளத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்க: வாக்கு சாவடிக்குள் நுழைந்த விஷப் பாம்பு…வெலவெலத்து ஓடிய பொது மக்கள்: கேரளாவில் பரபரப்பு!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடுன கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்!

அதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த...

இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8240...

மனைவி இறந்த வேதனையில், முதியவர் விஷம் குடித்து தற்கொலை!

தூத்துக்குடி தூத்துக்குடி அருகே மனைவி உயிரிழந்த வேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அடுத்த கீழபூவாணி...

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகளா?.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. தொகுதிகள் இறுதியானாதால் பிரச்சாரம்...
TopTamilNews