Home தமிழகம் வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன. அதனால் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தற்போது அனைத்து கட்சிகளிலும் கூட்டணி பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் அனைத்தும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்  சிறப்பு முகாம்கள்

இதனிடையே தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பணியை தொடக்கி விட்டது. வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் அந்த மாதத்திற்குள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஜனவரி 15க்கு பதிலாக 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

4.27 கோடி பேர் குணமடைந்தனர் – உலகளவில் கொரோனா

நவம்பர் 28-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை

காதலனுடன் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த பெண், தன்னுடைய பெற்றோருக்கு பயந்து தன்னை வாலிபர் கூட்டம் பலாத்காரம் செய்ததென்று பொய் சொன்னதால் அந்த காதலனை...

‘தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி’ – இன்றும் குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் போது தங்கக் காசுகளின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றத்தை சந்தித்தது. எதிர்பாராத...

அண்ணாமலையார் மகா தீபம்! – மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மகா கொப்பரை!

கார்த்திகை மாதத்தில் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீப நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்கான கொப்பரையை...
Do NOT follow this link or you will be banned from the site!