Advertisementவழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?வழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?
Home ஆன்மிகம் வழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?

வழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?

இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவார்கள். இந்த தாத்பர்யம் அறியாமல் பிரதோஷ காலங்களில், நந்தியை வழிபட்டால் பணம் வரும், செல்வம் கொட்டும்

வழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?

இறை வழிப்பாட்டில் சில விதிமுறைகளை ஆன்மிகப் பெரியோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.அதில் முக்கியமானவது சிவ வழிபாட்டில், சிவனுக்கும் நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லக் கூடாதென்பது. சிவாலயங்களில் மட்டும் அல்லாமல், எந்த தெய்வத்தின் ஆலயமாக இருந்தாலும், மூலவருக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது. 

சிவாலயங்களில் இறைவனுக்கு எதிரே  கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்தி தேவரை தருமவிடை என்றழைக்கிறோம். என்றென்றும் இந்த உலகில் அழிவே இல்லாதது தருமம் மட்டும் தான். அது ரிஷபம் வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். 

sivan

ஒரு முறை தருமத்தின் தேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால், மனமுருகி நம்மை வணங்குவோர் செய்கின்ற பாவங்கள் கூட அறமாக மாறிவிடும் என்று வரம் அளித்தார் சிவபெருமான்.

சிவாலயங்களில் இருக்கும் நந்தி சிலையை நன்கு கவனித்துப் பார்த்தால், நந்திதேவர்  மூன்று கால்களை மடக்கி, ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதைப் பார்க்கலாம். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்கிற சிவனின் ஆணைக்கேற்பவே நந்திதேவர் அவ்வாறு அமர்ந்திருக்கிறார். 
சிவனின் வாகனமும் நந்தி தான்.வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் இருக்கிறது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை பக்தர்களுக்கு விளக்குவதற்காகத் தான் எப்பொழுதும், எல்லா ஆலயங்களிலும் நந்திதேவர் சிவனைப் பார்த்தப்படி அமர்ந்திருக்கிறார். ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவிற்கும் இடையில் நாம் இடையூறாகச் செல்லக் கூடாது தானே? 

sivan

அப்படி மீறியும் இறைவனுக்கும், நந்திக்கும் குறுக்கே செல்வது, கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.எப்பொழுதும், நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே பிறகு நாம் இறைவனைக் காணச் செல்ல வேண்டும். 

கோயிலின் வாசல் அருகே கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். சைவ சமயத்தில் முதல் குருவாகக் கருதப்படுவது திருநந்தி தேவர். ஆலயங்களில் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மை தான். நந்தி, தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. நந்தி என்கிற சொல்லுக்கு எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவார்கள். இந்த தாத்பர்யம் அறியாமல் பிரதோஷ காலங்களில், நந்தியை வழிபட்டால் பணம் வரும், செல்வம் கொட்டும் என்று நந்தியையும், இறைவனையும் நேருக்கு நேர் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு நந்தியின் எதிரே நிற்கும் பக்தர்களை என்னச் சொல்வது?

ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தைச் சேர்க்காவிட்டாலும், தவறுதலாக புரிந்துக் கொண்டு மென்மேலும் பாவங்களைச் சேர்க்காதீர்கள். சில வழிமுறைகள் காரணங்களோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாட்டின் போது ‘சிவனுக்கும் நந்திக்கும்’ குறுக்கே ஏன் செல்லக் கூடாது.!?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி...
TopTamilNews