Home சினிமா வர்மாவை விட அட்டகாசமாக வெளியானது ஆதித்ய வர்மா டீசர்! 

வர்மாவை விட அட்டகாசமாக வெளியானது ஆதித்ய வர்மா டீசர்! 

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்த விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் பாலா ரீமேக் செய்தார். வர்மா என்ற தலைப்பில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்காகக் காத்து இருந்த நிலையில்,திடீரென படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

aditya

பின்பு மீண்டும் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி பட துணை இயக்குநர் கிரீசாய என்பவர் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இயக்கியுள்ளார். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனித்தா சந்து மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

 இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. இதில் துருவ் பார்ப்பதற்கு, தந்தை விக்ரம் போலவே சில காட்சிகளில் இருக்கிறார். மேலும் இதை பார்த்த ரசிகர்கள் வர்மா பட டீசரை விட இந்த டீஸர் அட்டகாசமாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews