வரப்போவது தி.மு.க ஆட்சிதான்… மக்கள் பணிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்! – உற்சாகமூட்டிய மு.க.ஸ்டாலின் 

தி.மு.க வெற்றிபெற்ற ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கும் என்று அ.தி.மு.க அமைச்சர் கூறிய நிலையில், அடுத்து வர இருப்பது தி.மு.க ஆட்சிதான்… அப்போது மக்கள் பணிக்குத் தேவையான முழு உதவியும் கிடைக்கும் என்று உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தி.மு.க வெற்றிபெற்ற ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கும் என்று அ.தி.மு.க அமைச்சர் கூறிய நிலையில், அடுத்து வர இருப்பது தி.மு.க ஆட்சிதான்… அப்போது மக்கள் பணிக்குத் தேவையான முழு உதவியும் கிடைக்கும் என்று உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

mk-stalin-09

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க நிர்வாகிகள் மாநாடு திருச்சியில் நடந்து வருகிறது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்ற மகத்தான வெற்றியே, நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ளும் பணிகள் முக்கிய பங்காற்றும். தி.மு.க சார்பில் வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்படவிடமாட்டார்கள். பல்வேறு இடையூறுகளை அமைச்சர்கள், ஆளுங்கட்சிக்குத் துணைபோகும் அதிகாரிகள் கொடுக்கக்கூடும். ஆனால் அப்படி எந்த இடையூறுகள் வந்தாலும், எதிர்த்து நின்று மக்கள் பணியாற்ற வேண்டும்.
அரசின் அதிகார அநியாயங்களையும், தேர்தல் ஆணையத்தின் அக்கிரமங்களையும் மீறி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அதனால்தான் இது சாதாரண வெற்றியல்ல; மகத்தான வெற்றி. உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சித் தலைமைக்கும், நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் வரும். அப்படித் தேர்தல் வந்தால் உறுதியாக தி.மு.கவே ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பணிக்குத் தேவையான முழு உதவியும் செய்து தரப்படும்” என்றார்.

 

Most Popular

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...

‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

இன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை நிறுவ, ஊர்வலம் நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பா.ஜ.க, இந்து அமைப்புகள்...
Do NOT follow this link or you will be banned from the site!