Home அரசியல் வயசு பெண்களின் முதுகில் மோடியின் சாதனை... ஜெயலலிதாவையே மிஞ்சிட்டாரு மோடி!

வயசு பெண்களின் முதுகில் மோடியின் சாதனை… ஜெயலலிதாவையே மிஞ்சிட்டாரு மோடி!

நவராத்திரி விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் சிலரைத் தேடிப் பிடித்து அவர்களின் முதுகில் மோடி அரசின் சாதனைகளை ஓவியமாக வரைந்து பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் பாஜகவினர்.

தமிழகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற வாகனங்கள், அம்மா வாகனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பச்சைக் கலரில், ஜெயலலிதா மறைந்து வருஷங்களைக் கடந்த பின்பும் அம்மா உணவகங்கள், ஏழைகளின் பசியாற்றி வருகிறது. இவ்வளவு ஏன்… சென்ற வருஷ நவராத்திரி வரையில், அதிகமாக விற்பனையான கொலு பொம்மை நம்ம முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மை தான்.

Jayalalitha

கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படுகிற சச்சினின் சாதனையையே முறியடிக்கிற காலத்தில், அரசியல்ல இதெல்லாம் ஒரு சாதனையா என்று பாஜகவினர் கிளம்பிவிட்டார்கள் போல. வடமாநிலத்திலும் நம்மூர் வளர்மதி மாதிரியான ஆட்கள் இருப்பார்கள் போல!

Painting

வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையை இந்த பத்து நாட்களுமே வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் நடிகை நமீதாவின் சொந்த ஊரான சூரத்தில் நவராத்திரி விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் சிலரைத் தேடிப் பிடித்து அவர்களின் முதுகில் மோடி அரசின் சாதனைகளை ஓவியமாக வரைந்து பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள் பாஜகவினர்.

Narendra modi

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை குறித்தும், சந்திராயன் -2 சாதனையையும், திருத்தப்பட்ட வாகன சட்டம் குறித்தும் விதவிதமாக வயசு பெண்களின் முதுகுகளில் மோடியின் சாதனை சக்கை போடு போடுகிறது.

இவங்களே படமும் வரைவாய்ங்க…. அப்புறம் முதுகைப் பார்த்தாய்ங்கன்னு கேஸூம் போடுவாய்ங்க!

மாவட்ட செய்திகள்

Most Popular

துப்பாக்கிச்சூடு வழக்கு : ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்!

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று...

“அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது” : ஸ்ருதி – அக்ஷரா அறிக்கை!

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கமல் ஹாசனின் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். நடிகரும்...

“மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

மறைந்த மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அடையாறு...

நெருங்கும் தேர்தல் : பிரதமர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் பழனிசாமி...
Do NOT follow this link or you will be banned from the site!