Home சினிமா வயசுக்கு மரியாதை கொடு: மீராவை வெளுத்து வாங்கும் மோகன் வைத்யா! 

வயசுக்கு மரியாதை கொடு: மீராவை வெளுத்து வாங்கும் மோகன் வைத்யா! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராகக் கடைசியில் வீட்டிற்குள் நுழைந்தவர் மீரா மிதுன். இவர் வீட்டிற்குள் வந்த நாள் முதலே எதாவது ஒரு பிரச்சனை கிளம்பிக் கொண்டே தான் இருக்கிறது. அபிராமி, சாக்ஷி தொடங்கி வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டை போட்டுள்ளார். 

அதனால் இவரின் செயல் பிடிக்காமல் ஹவுஸ் மேத்ஸ் பாதிபேர் இவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்து நாமினேட் செய்துள்ளனர். இந்த நிலையில் இவரை நாமினேட் செய்தும் யாருடனும் ஒத்துப் போவது போல் தெரியவில்லை. 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எதிரணிக்கு உதவி செய்ய கூடாது என்று கூறப்பட்டு போல, ஆனால் மீரா வழக்கம் போல் அதில் மூக்கை நுழைந்து மீண்டும் ஒரு கலவரத்தை உண்டாக்கியுள்ளார். 

meera

அதில் கவின், மீராவிடம் ‘ஹெல்ப் பண்ண கூடாது என்று ரூல்ஸ் பூக்கில் கொடுத்துருக்காங்க. அப்படி இருக்கும் வேலையில் நீ என் இப்படி பண்ற என்று கேட்கிறார். உடனே மீரா, ‘நான் நேரடியா ஹெல்ப் பண்ணல, மறைமுகமாக செய்யுறன். நீ பேசாத என்று மிகவும் கோபமாகக் கூறினார். உடனே கவின், ‘உனக்கு அறிவு இருந்த ரூல்ஸ் புக் எடுத்து படி, உங்கிட்ட ஆசைப்பட்டு யாரும் பிரச்சினை பண்ணல’ என்று கோபமாக பேசுகிறார். 

இதை பார்த்து கொண்டு இருந்த இந்த வார தலைவரான மோகன் வைத்யா,’வயசு விதியசம் பார்த்து பேசு, எல்லார் கிட்டயும் கத்துற மாறி கத்துற, வயசுக்கு மரியாதை கொடு… என்று மீராவை வெளுத்து வாங்குவது போல் புரோமோ முடிந்துள்ளது. ஆக மொத்தத்தில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தரமான சம்பம் காத்துக்கொண்டு இருக்கிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற பழங்குடியின மக்களின் புத்தரிசி திருவிழாவில், கொரோனா காரணமாக குறைந்த அளவிலான மக்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைப்படி திருவிழாவை நடத்தினர்.

85 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்துக்கும் கீழ் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தினசரி புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிப்பது தற்போதுதா சற்று தணிந்து வருகிறது. இந்தியாவில்  கடந்த 85 நாட்களில் முதல்  முறையாக தற்போதைய...

ரஜினி வெளியே வராமல் இருப்பது ஏன்? கராத்தே தியாகராஜன் பதில்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ரஜினி பொதுமக்களுக்கு நல்ல ஒரு முடிவை அறிவிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து...

”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் !’

கடந்த ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் 5 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. இதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!